கல்வாரி மலை மேல் | Kalvari malai mel yega

கல்வாரி மலை மேல்
ஏக தேவ திருசுதனாய்
கோரமான பாடுகள் அடைந்தே
குருசினில் தொங்கினாரே
இயேசு குருசினில் தொங்கினாரே

1. பாவங்கள் ஏற்றவராய்
    பெரும் பாடுகள் அடைந்தவராய்
    பாரச் சிலுவைதனில் பரன்
    இரத்தம் சிந்தினாரே

2. வியாதிதிகள் நீக்கினாரே
    பரிகாரியாய் விளங்கினாரே
    ஆழ்ந்த விசுவாசத்தால் நல்ல
    ஆரோக்கியம் அடைவோம்

3. துக்கங்கள் சுமந்தவராய் கொடும்
    வேதனை அடைந்தவராய்
    தூக்கி நிறுத்தி நம்மை இயேசு
    தேவன் பெலன் அளிப்பார்

4. சிலுவையை சகித்தவராய்
    முன் மாதிரியானவராய்
    பாடு வேலைதனில் இறங்கி
    மன்னிப்பை ஈந்தார்

5.  முள்முடி சூடினோராய் பல
     நிந்தைக்குள் அனவரால்
     பூரண சுத்தராய் பரிசுத்தம்
     செய்வதற்காய்